உடல் இரண்டான நிலையில் சடலம் மீட்பு

எஹலியகொடை மின்னான பிரதேசத்தில் தலையும் முண்டமும் வேறாக்கப்பட்ட நிலையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலொன்றை அடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் வீதியோரத்தில் காணப்பட்ட தலையில்லாத சடலத்தையும் குறித்த இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் புதர்களுக்குள் வீசப்பட்டிருந்த பையொன்றுக்குள் சுற்றப்பட்டிருந்த தலையையும் மீட்டுள்ளனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மீட்கப்பட்ட சடலம் கலப்பிட்டமட பிர தேசத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவருடையது என அடையாளம் கண்டுள்ளனர்.

இதேவேளை கொல்லப்பட்ட மேற்படி இளைஞருக்கு கொலை குற்றம் சாட்டப்பட்ட வழக்கொன்று தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை எஹலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.