மயானத்தில் தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்த இளம் குடும்பஸ்தர்..!!

மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேத்தாழைப் பகுதியில் உள்ள மயானத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டி இன்றையதினம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.பேத்தாழையைச் சேர்ந்த 22 வயதுடைய ச.புஸ்பகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த திங்கள் கிழமையன்று சமுர்த்தி பணத்தினை பெற்று மனைவியிடம் வழங்கிவிட்டு தானும் அதில் ஒரு தொகையினை எடுத்துக்கொண்டு வேலைக்கு சென்றுவருவதாக கூறி வீட்டை விட்டு வெளியேறி சென்றதாக இறந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.குறித்த நபர் தீ மூட்டி எரிந்து கொண்டிருப்பதனை அவதானித்த பொதுமக்கள் கல்குடா பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தினை மீட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.