நாட்டின் நிலைமை மிக மோசம் ! விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

கோவிட் நிலைமையைப் பொறுத்தவரை நாடு தற்போது ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது என்று ஐ.டி.எச் என்ற தொற்று நோய்கள் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்சரியான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்படாவிட்டால் நிலைமை ஒரு பெரிய பேரழிவில் முடிவடையும் என்று அவர் எச்சரித்துள்ளார்.


எதிர்வரும் வாரங்களில் ஒரு பெரிய அழிவைத் தவிர்க்க வேண்டுமானால், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஒத்துழைப்புடன் மற்றும் சரியான முறையில் எடுப்பது மிக முக்கியமானது என்று அவர் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.கோவிட் தொற்றுக்களின் அதிகரிப்பு அடிப்படையில் மற்ற நாடுகளின் போக்கை ஆராய்ந்தால், நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.

இந்த நிலைமையை இலங்கையும் எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ஆகவே, தகுந்த நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால், இன்னும் மூன்று அல்லது நான்கு வாரங்களில் நாடு ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்ளும் என்பது உறுதி என்று மருத்துவர் விஜேவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.எனவே மக்கள் முகக்கவசங்களை சரியாக அணிய வேண்டும், கை சுத்திகரிப்புக்களை பயன்படுத்த வேண்டும், கைகளை சரியாகக் கழுவ வேண்டும், உடல் ரீதியான தூரத்தை பராமரிக்க வேண்டும்.

பெரிய கூட்டங்களைத் தவிர்ப்பதும் முக்கியம் என்று அவர் சுட்டிக்காட்டினார். மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மோசமான நடத்தைக்கான விலையை தற்போது இலங்கை மக்கள் செலுத்த நேரிட்டுள்ளது.இந்த நிலையில் சுகாதார விதிகளை பின்பற்ற மீண்டும் தவறினால், ஒரு பெரிய பேரழிவு தவிர்க்க முடியாதது, என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.