வெளிநாட்டு பயணிகள் இலங்கை வர தடை!

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவதற்காக பயணிகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.

தற்போதைய கோவிட் நிலைமையை கருத்திற்கொண்டு மே 21ஆம் திகதி இரவு 11.59 மணி தொடக்கம் மே 31 இரவு 11.59 மணிவரையான காலப்பகுதியில் இந்த தடை அமுலில் இருக்கும்.

எனினும், இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல முடியும் என அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் சரக்கு விமானங்களின் சேவை தொடரும் என்பதோடு, சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் வருவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.