இன்றைய வானிலை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

இலங்கையின் வானிலையில் இன்று மத்திய சப்ரகமுவ ஊவா கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் முல்லை தீவு மாவட்டங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் 50 மில்லி மீட்டர் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேல், வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இலேசான மழை பெய்யலாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது