எதிர்வரும் 24, 25 ஆம் திகதிகளில் அரச விடுமுறை !

அரச விடுமுறை நாட்களாக இரண்டு நாட்களை அறிவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 24ஆம் திகதி திங்கட்கிழமை மற்றும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆகிய நாட்களில் அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


நேற்றைய தினம் அமைச்சரவை அதற்கு அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று இரவு இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் முன்வைக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது.