அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்!

அரசாங்கத்திற்கு சொந்தமான அமைச்சுக்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் மீதும், இலங்கையிலுள்ள சீனத்தூதரகத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


இதனை விமானப்படையின் ஊடகப் பேச்சாளரான குரூப் கப்டன் துஷான் விஜேதிலக்க தெரிவித்தார்.

அத்துடன் இன்று காலை இடம்பெற்றிருக்கின்ற இந்த சைபர் தாக்குதல் பற்றி பாதுகாப்புப் பிரிவு, இலங்கை கணணி அவசர நடவடிக்கைப் பிரிவு உள்ளிட்டோருக்கு தகவல் வழங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.