பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்!

பாடசாலைகள் விரைவில் திறக்க வேண்டுமாயின், பாடசாலைகளினுள் தேவையான சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது, அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,


பாடசாலை ஆசிரியர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.தற்போது, மேல் மாகாணத்திலுள்ள ஆசிரியர்களு்ககு தற்போது கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய மாகாணங்களிலுள்ள ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி செலுத்த எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,இலங்கையில் நாளாந்தம் கோவிட் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் சிலையில்,எதிர்வரும் வாரம் நாடளாவிய ரீதியில் இரண்டு பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.இதன்படி மே 21 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இரவு 11 மணி தொடக்கம் மே மாதம் 25 ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணி வரையும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும், மே 25 செவ்வாய்கிழமை இரவு 11 மணி முதல் மே 28 வௌ்ளி அதிகாலை 4 மணி வரை மற்றுமொரு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.