இன்று முதல் தொடர்ந்து மூன்று மாதங்கள் விடுமுறையில் வடக்கு ஆளுநர்?

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், மூன்று மாத மருத்துவ விடுப்புக் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று தொடக்கம் அடுத்துவரும் மூன்று மாதங்களுக்கு இந்த விடுப்பு கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் விசேட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஜனாதிபதியிடம் அவர் விடுத்துள்ள கோரிக்கையினையடுத்து வேறொரு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண பதில் ஆளுநராக மூன்று மாதங்களுக்கு நியமிக்கப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.இதேவேளை, ஆளுநரின் பணிகளை ஒழுங்குபடுத்தி நிர்வாகத்தை முன்னெடுக்க வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் ஆகியோரைக் கொண்ட குழுவை அனுமதிக்குமாறும் ஆளுநர் தனது கடிதத்தில் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்மைக்காலமாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், கொழும்பிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திலிருந்தே பணிகளை முன்னெடுத்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.