நாடாளுமன்றத்தில் இரண்டு பேருக்கு கோவிட் தொற்று

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தில் பணிப்புரியும் ஊழியர் ஒருவருக்கும், நாடாளுமன்றத்தின் வரவேற்பாளர் ஒருவருக்கும் கோவிட் – 19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் குறித்த இடங்களில் பணிப்புரியும் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் கிருமி தொற்று நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் மற்றும் உதவி செயலாளர் நாயகம் ஆகியோருக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் அவர்களுக்கு கோவிட் தொற்றவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்றம் நாளை முதல் மூன்று நாட்களுக்கு கூடவுள்ளது.

இரண்டு தினங்கள் கொழும்பு துறைமுக நகர விசேட ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதமும் வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.