இலங்கையில் கொரோனாவால் 4வது கர்ப்பிணிப் பெண் மரணம்!

இலங்கையில் கொரோனா தொறால் நான்காவது கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளார் மாலபே, நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையில் அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,

திஸ்ஸமஹாராம, யயகொடவில் வசிக்கும் 35 வயது பெண்ணே இவ்வாறு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

தனது மூன்றாவது பிரசவத்திற்கு தயாராகும் போது அவர் உயிரிழந்துள்ளார். அவர் எட்டு மாத கர்ப்பமாக இருந்தார்.

மகரகமவில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட பின்னர், அந்தப் பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது. பின்னர் பரிசோதனையில் அவரது கணவருக்கும் வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது.

விருந்தில் கலந்து கொண்ட 17 பேருக்கு கோவிட் – 19 தொற்று இருப்பதுபரிசோதனையில் தெரிய வந்துள்ளது.