கனடாவில் ஸ்காபரோவில் உள்ள தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு!

ஸ்காபரோவில் தமிழ்ச் சமூகத்தினருக்கு இன்று ஒரு நாள் கொரோனா தடுப்பூசி முகாம் இடம்பெறவுள்ளது. இன்று காலை 9 மணி தொடக்கம், மாலை 5 மணிவரை ஸ்காபரோ புரூக்சைட் பொதுப் பாடசாலையில் இந்த தடுப்பூசி முகாம் செயற்படும் .


இங்கு, 2003ஆம் ஆண்டுக்கு முன்னர் பிறந்த – 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பைசர் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள முடியும்.

தடுப்பூசி போடுவதற்கு ஸ்காபரோவில் வசிப்பதை அல்லது தொழில் புரிவதை உறுதிப்படுத்தும் ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.