இலங்கை மக்கள் எதிர் நோக்கவுள்ள மற்றுமொரு ஆபத்து – வைத்தியர்கள் எச்சரிக்கை

மழையுடன் கூடிய காலநிலையுடன் கோவிட் -19 வைரஸ் நோய் பரவல் அதிகரிக்கும் ஆபத்து காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் மருத்துவர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக சாதாரணமாக சுவாச நோய்கள் அதிகரிக்கலாம் எனவும் இதனால், மக்கள் சன நடமாட்டம் உள்ள இடங்களுக்கு செல்லாது இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

வெள்ள பெருக்கு காரணமாக வயிற்றோட்டம், டெங்கு உட்பட வேறு நோய்கள் பரவும் ஆபத்து காணப்படுகிறது. இதனால் மக்கள் சுத்தமான குடிநீரை அடிக்கடி பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வெள்ள நிலைமை காரணமாக கோவிட்-19 வைரஸ் பரவலும் அதிகரிக்க கூடும். வெள்ளம் காரணமாக இடம்பெயரும் மக்களை ஒன்றுக் கூடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மழையுடன் கூடிய காலநிலையுடன் நோய்கள் பரவினால், சுகாதார ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலைகளிலும் இடப்பற்றாக்குறை ஏற்படக் கூடும்.

இப்படியான நிலைமை ஏற்படாது இருப்பதை தவிர்க்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் நவீன் டி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.