இலங்கையில் சற்று முன் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு..!!

இலங்கையில் மேலும் இரண்டு கொரோனவைரஸ் தொற்றாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து மொத்த தொற்றாளிகளின் எண்ணிக்கை 668 ஆக உயர்ந்துள்ளது.இந்தநிலையில், புதிதாக மூன்று பேர் தொற்றில் இருந்து குணமாகி இன்று வீடுதிரும்பியுள்ளனர்.
அவர்களையும் சேர்த்து தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 157ஆக உயர்ந்துள்ளது.நாட்டில் தற்போது சுமார் 1500 வரையிலான கொரோனா பிசி ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.