பேஸ்புக் காதலால் விபரீதம் – யுவதிக்கு நேர்ந்த கதி

பேஸ்புக் மூலம் அறிமுகமான நபர் ஒருவர் காதலிப்பதாக கூறி தனியாக அழைத்துச் சென்று யுவதி ஒருவரை நண்பர்கள் 24 பேருடன் சேர்ந்து கூட்டாக முறையற்ற விதத்தில் நடத்திய சம்பவம் ஒன்று இந்திய உத்தரகண்ட் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் டெஹ்ராடூனைச் சேர்ந்த 22 வயதாகும் அந்த யுவதியின் குடும்பம் தற்போது உத்தரப்பிரதேச மாநிலம் குருகிராமில் வசித்து வருகிறது. இருப்பினும் குறித்த யுவதி மட்டும் டெல்லியில் தனியாக தங்கியிருந்து வீட்டு பணியாளராக இருந்து வந்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் ஹரியானாவைச் சேர்ந்த 23 வயதாகும் இளைஞருடன், அந்த யுவதி பேஸ்புக்கில் அறிமுகமாகி, இருவரும் மொபைல் நம்மர்களை பரிமாறி பேசி வந்துள்ளார்.

மாதக்கணக்கில் இருவரும் பேசிய நிலையில், அந்த யுவதியை காதலிப்பதாக கூறிய இளைஞர் , தன்னுடைய பெற்றோரை அறிமுகம் செய்து வைப்பதாகவும் நேரில் பேசி திருமணம் குறித்து பேசுவதற்காக அவரது சொந்த ஊருக்கு வருமாறும் அழைத்துள்ளார்.

இதனை ஏற்று கடந்த மே 3ஆம் திகதி ஹோதல் பகுதிக்கு சென்று தன்னுடைய காதலனை அந்த யுவதி சந்தித்திருக்கிறார். இருப்பினும் பெற்றோரை சந்திக்காமல் அருகில் உள்ள கிராமம் ஒன்றின் காட்டுப்பகுதிக்கு அந்த யுவதியை அழைத்துச் சென்றிருக்கிறார்.

இருவரும் அங்கே மது அருந்தியதாகவும், உணவு உட்கொண்டதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். இந்த நிலையில், அந்த இளைஞரின் சகோதரர் மற்றும் அவருடைய நண்பர்கள் அதே பகுதியில் கும்பலாக மது அருந்தியுள்ளனர்..அவருடைய சகோதரர், நண்பர்கள் அந்த அந்த யுவதியை இரவு முழுவதும் தகாத முறையில் நடத்தியுள்ளனர்.

மறு நாள் காலை பழைய இரும்பு வியாபாரம் பார்த்து வந்த ஆகாஷிடம் அந்த பெண் அழைத்து செல்லப்பட்ட நிலையில், அங்கும் 5 பேர் அவரை தகாத செயலுக்கு உட்படுத்தியுள்ளனர்.

25 பேர் அந்த யுவதியை தகாத முறைக்கு உட்படுத்திய நிலையில் பதர்பூர் அருகே அவரை வீசிச் சென்றுள்ளனர்.

இந்த அதிர்ச்சியில் இருந்து குறித்த யுவதி உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மீண்டு வர 9 நாட்கள் ஆகியுள்ளது. இதன் பின்னர் மே 12ஆம் திகதி ஹசன்பூர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று தன்னை வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் 25 பேர் மீதும் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து 25 பேர் மீதும் கடத்தல், கூட்டு வல்லுறவு, கூட்டுச் சதி உள்ளிட்ட பிரிவுகளில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முக்கிய நபரான அந்த குறித்த காதலனை கைது செய்துள்ள பொலிஸார் தலைமறைவாக இருந்து வரும் பிறரை தேடி வருகின்றனர். கொரோனா பரவல் உச்சமடைந்துள்ள இந்த நேரத்திலும் டெல்லி அருகே நடைபெற்றுள்ள இந்த கூட்டு வன்புணர்வு சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.