கொரோனா நோயாளிகளுக்கு வீடுகளில் சிகிச்சை !

அறிகுறியற்ற கொரோனா நோயாளிகளை திங்கள்கிழமை முதல் தங்கள் வீடுகளில் கண்காணித்து சிகிச்சையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதனை ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.

கொரோனா பரிசோதனைகளில் தொற்று உறுதிசெய்யப்பட்டு அறிகுறிகள் தென்படாத நோயாளிகள் சிகிச்சைக்காக தங்கள் வீடுகளில் சுகாதார அதிகாரிகளால் கண்காணிக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், அவர்களுக்கு நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.