பொலிஸ் மா அதிபர் பிறப்பித்துள்ள அவசர உத்தரவு !

நாட்டில் முகக்கவசம் அணியாதவர்களை பொலிஸார் கைது செய்து தூக்கிக் கொண்டு செல்வதை தொடரக்கூடாது என பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் சிறப்பு சுற்றறிக்கை மூலம் தகவல் அளித்துள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு நபர்களை தூக்கிச் செல்லும் போது பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் இருந்தால் அவர் மூலம் தூக்கிச்செல்லும் அதிகாரிகளும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் கைது செய்யப்பட்ட நபர்களை ஒரே வாகனத்தில் கொண்டுசெல்வதால் பலருக்கும் பரவும் ஆபத்து உள்ளது என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் இனிமேல், முகக்கவசம் இல்லாத நபர்களை அழைத்துச் செல்லக்கூடாது என்றும் கைது செய்யப்பட்டவர்களை ஒரே வாகனத்தில் கூட்டக்கூடாது என்றும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.