கோவிட் தொற்றுக்கு பலியான இளம் தாய்!

கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண் ஒருவர் சிசேரியன் சத்திர சிகிச்சையின் பின்னர் உயிரிழந்துள்ளார்.கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றுக்குள்ளாகி, உயிரிழந்த மூன்றாவது கர்ப்பிணித் தாய் இவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கொபேயிகனே – பொரலுகொட பகுதியைச் சேர்ந்த குறித்த 28 வயதான பெண்ணுக்கு, கொவிட் தொற்று ஏற்பட்டு, கவலைக்கிடமான நிலையில், குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்தே, குறித்த பெண்ணுக்கு சிசேரியன் சத்திர சிகிச்சை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சத்திர சிகிச்சையின் ஊடாக பிரசவம் இடம்பெற்றுள்ளதுடன், குழந்தை சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பதான வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.