பயணத்தடை நேரத்தில் இரத்ததானம் செய்யும் முறை !

பயணத்தடை அறிவித்ததோடு, இந்த மூன்று நாட்களுக்கும் திட்டமிடப்பட்டிருந்த இரத்ததான முகாம்களும் இரத்தாகிவிட்டன. ஆனால் இப்போதும் நீங்கள் இரத்தவங்கிக்கு வந்து இரத்ததானம் செய்யமுடியும்.
இந்த இணைப்பைச் சொடுக்குவதன் மூலம் உங்களைப் பதிவு செய்து கொண்டு, உங்களுக்கு அருகிலுள்ள இரத்த வங்கியில் உங்களுக்கு வசதியான நேரத்தில் சென்று இரத்ததானம் செய்ய முடியும்.
https://nbts.health/
பதிவு செய்யும் முறையக் கீழே படங்களில் விளக்கியிருக்கிறேன்.

பதிவு செய்ததும் உங்கள் தொலைபேசிக்கு வரும் குறுஞ்செய்தியைப் பொலிசாரிடம் காட்டி இரத்த வங்கிக்கு வரமுடியும். (இதை வேறு நோக்கங்களிற்காகப் பயன்படுத்துதல் சட்டரீதியான குற்றமாகும்.)
அதேபோல, உங்களால் பதிவுசெய்ய முடியாவிடின், வைத்தியசாலையினை தொடர்புகொள்ளும் பட்சத்தில் உங்கள் தகவல்களைப் பெற்றுப் பதிவு செய்து தருவோம்.
இரத்தவங்கியில் சுகாதாரப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன. அத்துடன் வைத்தியசாலை வளாகத்திற்குச் செல்லாமல் 12ஆம் இலக்க வாசல் மூலம் நீங்கள் இரத்தவங்கிக்கு நேரே வருகை தரமுடியும்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் எமக்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது. அசாதாரணமான இந்த நிலையையும் கடந்து வர நீங்கள் கைகொடுக்க வேண்டும்.
நன்றி!

Via : Mathurange Krishnapillai