பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! ஜூன் முதல் மாதம் கொடுப்பனவு

பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்க இலங்கை இராஜாங்கம் அறிவிப்பு.
பதிவு செய்யப்பட்ட பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு குறிப்பிட்டளவு மாதாந்த கொடுப்பனவு ஒன்றை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்தரவினால் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகலவிற்கு இது தொடர்பில் கடிதம் ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பதிவு செய்யப்பட்ட பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு 2,500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.