தாய் இறந்த மறுநாள் மகன் மரணம்! யாழில் நடந்த பெரும் துயரம்

யாழ்ப்பாணம் உரும்பிராய் – மருதனார்மடம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய தாயும் மகனும் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்த சோகம் நேற்றும் இன்றும் நிகழ்ந்துள்ளது.

வல்வெட்டித்துறை வேம்படியைச் சேர்ந்த உறவினர்களான ஏழு பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வழிபாட்டுக்காகச் சென்றிருக்கின்றனர்.

மருதனார்மடம் – உரும்பிராய் வீதியில் கார் சென்றுகொண்டிருந்தபோது வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த ஏழு பேரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் படுகாயம் அடைந்திருந்த மோகனதாஸ் பிறேமாவதி (வயது 68) அவருடைய மகனான மோகனதாஸ் திலீபன் (வயது 32) ஆகிய இருவரும் அதி தீவிர சிகிச்சைப் பிரவில் அனுமதிக்கப்பட்டு கிச்சைபெற்றுவந்தனர்.

இந்நிலையில் தாயார் நேற்று (12) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தாயார் மறைந்த மறு நாள் மகனும் உயிரிழந்துள்ளார். காயமடைந்த ஏனையவர்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.