அட்சயதிருதியில் தங்கம் வாங்கினால் என்ன நடக்கும் தெரியுமா !

அட்சய திருதியை வந்துவிட்டாலே மக்கள் வாழ்க்கையில் செல்வம் கொழிக்க வேண்டும் என தங்க வாங்க முற்படுகின்றனர்.இந்நாளில் நகை வாங்க நகைக்கடைகளில் முன்பதிவு எல்லாம் செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மக்களின் இந்த மோகம்.

மேலும், தங்கம், வெள்ளி நகைகளின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்திருந்தாலும் கூட அதை எல்லாம் பொருட்படுத்தாமல் மக்கள் தங்கம் வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில், புராண காலத்தில் சித்திரை மாதம் வளர்பிறையின் மூன்றாவது நாள் செய்யும் எந்த வேலையும் விருத்தியாகும் என்றும், வேத காலங்களில் சான்றோர்கள் அட்சய திருதியை அன்று யாகங்கள் செய்யவும், பூஜைகள் செய்து கடவுள் வழிபாட்டில் மனம் லயிக்கவும், அத்தினத்தில் முடிந்த அளவிற்கு தான தர்மங்கள் செய்து மனதை நல்வழியில் கொண்டு செல்லவும் கூறினார்கள்.

அட்சய திருதியை நாளில் செய்யும் பூஜைகளின் பலன் பன்மடங்கு அதிகரித்து அதனால் நமக்கும், நம் சந்ததியினருக்கும் கடவுளின் ஆசி பரிபூரணமாய் கிடைக்கும் என்பதுதான் பெரியோர்களின் கருத்து. இதனால், அட்சய திருதியை அன்று தானம் செய்தால் ஆயுள் பெருகும்.

கால்நடைகளுக்கு உணவு அளித்தால் வாழ்வில் வளம் பெருகும். மேலும் தங்கம், வெள்ளி வாங்குவது சிறந்தது ஆகும் என கூறுகின்றனர்.

இறுதியாக வாழ்வில் உண்மையான வளம் பெற நாம் தங்கம், வெள்ளி நகைகளை மட்டும் தான் வாங்க வேண்டும் என்பதில்லை. முடிந்த அளவிற்கு இல்லாதவர்களுக்கு தான தர்மங்களைச் செய்யுங்கள்.