கொழும்பை விட்டு வெளியேறும் இலங்கை பணக்காரர்கள்

தலைநகர் கொழும்பில் வாழும் பணக்காரர்கள் நகரிலிருந்து வெளியேறியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பை விட்டு வெளியேறும் பணக்காரர்கள் தூர இடங்களுக்கு சென்று தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நகரை விட்டு வெளியேறிய பணக்காரர்கள், ஊழியர்கள் மூலம் நிறுவன நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேல் மாகாணத்தில் கோவிட்டின் மூன்றாவது அலை வேகமாக தலை தூக்க ஆரம்பித்துள்ளமையே இதற்கு காரணம் என குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.