மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு அறிவிப்பு

அனைத்து மாகாணங்களுக்கும் இடையிலான பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.

மே 30ஆம் திகதி வரை இந்த தடை விதிக்கப்படுகின்றது. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போதைய கோவிட் நிலைமையை கருத்திற்கொண்டு நாட்டை முடக்குவதற்கான எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் எதிர்வரும் ஓரிரு நாட்களில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதற்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.