கோவிட் தொற்றால் மற்றும் ஒரு கர்ப்பிணிப்பெண் மரணம்

இலங்கையில் மேலும் ஒரு கர்ப்பிணிப் பெண் கோவிட் வைரஸ் தொற்று காரணமாக இன்று உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

காலி, கராப்பிட்டிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவருடன் சேர்த்து இலங்கையில் கோவிட் தொற்றால் இதுவரை இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, நாட்டில் புதிய கோவிட் கொத்தணியில் 130 இற்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.