ஒரே நாளில் சடுதியாக உயர்ந்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் இன்றைய தினம் ஒரே நாளில் இரண்டாயிரம் கோவிட்-19 நோய்த் தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர்.

நாள் ஒன்றில் இலங்கையில் கோவிட் தொற்றாளர்கள் அதி கூடுதலாக பதிவான நாளாக இது கருதப்படுகின்றது.

இன்றைய தினம் இறுதியாக 927 புதிய தொற்றுதியாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதன்படி இன்றைய தினம் மொத்தமாக இதுவரையில் 2659 புதிய கோவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை,உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் உருமாறிய கோவிட் – 19 வைரஸின் திரிபுகள் இலங்கையிலும் கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.