வெளிநாட்டிலிருந்து இலங்கை வரும் விமான பயண சட்டத்தில் திருத்தம்!

வெளிநாட்டிலிருந்து ஊழியர்களையும் சுற்றுலா பயணிகளையும் நாட்டுக்கு அழைக்கும் போது ஒரு விமான பயணத்திற்கான பரிந்துரை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஒரு விமான பயணத்தின் போது 75 பேர் பயணிக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. எனினும் இதற்கு ஏற்ப சரியான முறையில் இயங்க தவறியமையினால் புதிய திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

75 பயணிகளில் 50 பேருக்கு அறவீடுகள் இன்றி தனிமைப்படுத்தல் வசதி செய்து கொடுக்கப்படும். அதன்படி வெளிநாடுகளில் தொழில் புரிந்துவிட்டு நாட்டுக்கு வருவோருக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.

ஏனையவர்கள் பணம் செலுத்தி தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். விமானத்தின் ஆசனம் 200 ஆக இருக்குமானால் அவற்றில் 75 பேர் தனிமைப்படுத்தல் முறைக்கமைய நாட்டுக்கு வர வேண்டும் என்றும், ஏனைய 125 பேர் சுற்றுலா பயணிகளாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.