சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்காது செயற்பட்டதாக கல்வியங்காடு சந்தை முடக்கம்!

கொரோனா சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்காது செயற்பட்டதாக கல்வியங்காடு செங்குந்த பொது சந்தை மறு அறிவித்தல் வரையில் முடக்கப்படுவதாக சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர்.
யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான குறித்த சந்தையில் கொரோனா சுகாதார விதிமுறைகளை பேணாத வகையில் சந்தை வியாபாரிகள் , நுகர்வோர் ஆகியோர் செயற்பட்டமையை அவதானித்த சுகாதார பிரிவினர் உடனடியாக சந்தையை முடக்கி வியாபர நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளனர்.

மறுஅறிவித்தல் வரை சந்தை முடக்கப்பட்டு இருக்கும் எனவும் , சந்தையை சூழவுள்ள பகுதிகளில் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.