கொழும்பில் இந்திய தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நபர்

இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள B.1.617 தொற்றினால் பாதிக்கப்பட்ட இலங்கையர் ஒருவர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பிலுள்ள தனிமைப்படுத்தல் முகாமிலுள்ள ஒருவரது பி.சி.ஆர் அறிக்கையிலேயே இது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.