கணவர் கேட்டதை கொடுக்க மறுத்த மனைவி… இறுதியில் நடந்த கொடூரம்

இந்தியாவில் கணவர் ஒருவர் குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவி தர மறுத்ததால் அவரைக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

ஆந்திராவின் விஜயவாடா நகரில் உள்ள எல்.பி.எஸ் நகர் பகுதியில் பொம்மை விற்பனையாளர் நீராஜா என்ற பெண். அவரது கணவர் துர்கா ராவுடன் வசித்து வந்தார்.

மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களின் வாழ்வில் மது என்ற பழக்கம் உள்ளே நுழைந்துள்ளது. ஆரம்பத்தில் குறைவாக மதுவருந்திய கணவர் நாட்கள் செல்ல செல்ல குடிக்கு அடிமையாகியதோடு, மது இல்லாமல் தூக்கம் வராது என்ற நிலைக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் மது அருந்துவதற்கு காசு கேட்டு மனைவியிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். கொரோனா காலம் என்பதால் பொம்மை வியாபாரம் மந்தமானதால் கணவருக்கு குடிப்பதற்கு பணம் கொடுக்க முடியாமல் போயுள்ளது.

சம்பவத்தன்று குடிபோதையில் மனைவியிடம், மீண்டும் பணம் கேட்டு தகராறு செய்துள்ள நிலையில், மனைவி பணமில்லை என்று கூறியதால், கோபமடைந்த துர்கா மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார், துர்காவை தீவிரமாக தேடி வருகின்றனர்.