தேங்காய் எண்ணெய் குறித்து வெளியான முக்கிய தகவல் !

உணவுபதார்த்தங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெயில் வேறு வகையான எண்ணெகளை கலப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தினை அதிவிசேட வர்த்தமானி ஊடாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதன்படி தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள், சுத்திகரிப்பாளர்கள், உற்பத்தியாளர்கள் மொத்தவிற்பனையாளர்கள் , விநியோகஸ்தர்கள் போன்றவர்களுக்கு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.