மட்டக்களப்பு விபத்தில் உயிரிழந்த பெண்!சமூக வலைத்தளப் பிரபலத்தின் தங்கை!

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் மியான்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் சமூக வலைத்தளப் பிரபலமும் பிரபல அறிவிப்பாளருமான திருமதி மேனகா சந்துருவின் தங்கை என்று தெரியவந்துள்ளது.

தொழில் நிமித்தம் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு சென்றுகொண்டிருந்தபோதே குறித்த விபத்து இடம்பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.

கொழும்பு தெஹிவளை வீதியில் வசிக்கும் துரைசிங்கம் வினோகா என்பவரே குறித்த விபத்தில் உயிரிழந்த பெண் ஆவார்.

விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.