இலங்கையில் உள்ள பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்படும் – சற்றுமுன் வெளியான தகவல்

இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக சற்று முன் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயத்தை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் அறிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டில் உள்ள அனைத்து முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என்பனவற்றையும் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் கோவிட் – 19 பரவல் அச்சுறுத்தலை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கும் மறு அறிவித்தல் வரை தடைவிதிக்கப்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.