சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்!

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிப்பதற்கான அனுமதியை வழங்காவிடில், இலங்கையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுமென லாப் கேஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யு.கே.எச். வெகபிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் தெரியவருகையில்,

சமையல் எரிவாயு இறக்குமதிக்கு செலவாகும் தொகைக்கு இணையாக சமையல் எரிவாயு விநியோகத்துக்கான செலவு காணப்படுகின்றது.

அத்தோடு இது பாரிய நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. ஆகையால், சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அவற்றை இறக்குமதி செய்வதில் பெரும் நஷ்டத்துக்குள்ளாகியுள்ளனர்.