இன்று மாலை 6 மணிவரை 1305 பேருக்கு தொற்று

நாட்டில் இன்று கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 1305 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனைத் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன்படி நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 118,834ஆக அதிகரித்துள்ளது.