பிரபல காமெடி நடிகர் பாண்டு திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்

கொரோனா நோய் தொற்று கோடிக்கணக்கான மக்களை கொன்று வருகிறது.
இந்திய மக்கள் அனைவரும் பெறும் அச்சத்தில் உள்ளனர். தற்போது தான் கொரோனா நோய் பாதிக்கட்ட ஆட்டோ கிராப் பட புகழ் பாடகர் கோமகன் உயிரிழந்தார் என்ற செய்தி வந்தது.

அதற்குள் கொரோனா நோயால் தமிழ் சினிமா சிறந்த நடிகரை இழந்துள்ளது. அது வேறுயாரும் இல்லை நகைச்சுவை நடிகர் பாண்டு அவர்கள் இன்று நோய் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
நேற்று தொற்று கண்டறியப்பட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

நடிகர் என்பதை தாண்டி பாண்டு அற்புதமான ஓவியர், எழுத்து வடிவமைப்பாளர். எம்.ஜி.ஆர் அவர்களே பாண்டுவை அழைத்து அதிமுகவின் கொடி, சின்னத்தை வடிவமைக்க கூறியிருக்கிறார்.