மந்திகை பொதுச்சந்தையை உடனடியாக மூடிய சுகாதார அதிகாரிகள்!

சுகாதார நடைமுறைகளை மீறி செயற்பட்டதன் காரணமாக மந்திகை பொதுச்சந்தையை சுகாதார அதிகாரிகள் உடனடியாக மூடினர்

கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக சந்தைகளில் சமூக இடைவெளிகளை பேணுதல், கைகழுவுதல் மற்றும் முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சந்தைகள் இயங்க வேண்டும் எனத் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது.

எனினும் இந்தச் சுகாதார முறைகளைப் பின்பற்றாது மந்திகைச் சந்தை இயங்கியது.

இதன் காரணமாக நேற்று புதன்கிழமை(05) சுகாதாரப் பகுதியினர் இச்சந்தையை தற்காலிகமாக மூடினர்.

சுகாதார நடைமுறைகள் உரியமுறையில் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்திலே, இச்சந்தை மீண்டும் திறக்கப்படும் என சுகாதார தரப்பினர் தெரிவித்தனர்.