பொதுமக்களுக்கு முக்கியமான செய்தி…இலங்கையில் ஒரு லீற்றர் பெற்றோலை இந்த விலைக்கு விற்க முடியும்..?

ஒரு லீற்றர் பெற்றோலை 75 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என பெற்றோலிய கூட்டுத்தாபன பொது ஊழியர் சங்கத்தின் செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். தெற்கின் சிங்கள ஊடகமொன்றுக்கு அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ள காரணத்தினால் இலங்கையில் அனைத்து செலவுகளையும் ஈடு செய்ததன் பின்னர் ஒரு லீற்றர் பெற்றோல் 75 ரூபாவிற்கும், ஒரு லீற்றர் டீசல் 52 ரூபாவிற்கும் விற்பனை செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.உலச சந்தையில் எரிபொருளுக்கான விலைகளை நிர்ணயம் செய்ய முடியாத நிலைமை உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தற்பொழுது நாட்டில் கையிருப்பில் உள்ள எரிபொருளானது ஒரு பெரல் 37 டொலருக்கு கொள்வனவு செய்யப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.எரிபொருளுக்கான விலை குறைப்பு ஏன் மக்களுக்கு சென்றடையவில்லை என அரசாங்கத்திடம் கோரிய போது அந்த விலை குறைப்பு நிவாரணத்தை பருப்பு, செமன் போன்ற பொருட்களுக்கு வழங்கி வருவதாக பதில் கிடைத்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.எனினும், தற்பொழுது பருப்பு மற்றும் செமன் ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.