இணையத்தில் வைரல் ஆகிவரும் யாழ் இளைஞர்களின் முயற்சி !

ஈழத்தின் இளம் இசையமைப்பாளரான பூவன் மதீசனின் பபூன் ( கோமாளி ) பாடல் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியீடு செய்யப்பட்டது. தொழிலாளர் படும் கஷ்டங்களை வித்தியாசமான காட்சியமைப்புடன் தமிழ் இசையில் பெரிதும் பயன்படுத்தாத ரெகே (reggae ) வகை இசையின் மூலம் வெளிப்படுத்தப்பட்டு சமூக வலைத்தளங்களில் அனைவரின் கவனங்களையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் ஈழத்து பொப்பிசை துறையின் சக்கரவர்த்தியாக மிளிரும் சின்னமாமியே, கள்ளுக்கடை பக்கம் போகாதே, லண்டனிலை மாப்பிள்ளையாம் போன்ற பாடல்களை பாடிய நித்தி கனகரத்தினம் அவர்கள் பூவன் மதீசனை வாழ்த்தி அவருடைய வாட்ஸாப்ப் கு அனுப்பிய வாழ்த்து செய்தியை பாடல் குழுவினர் பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளனர்.

“பெரிய வேலை செய்துள்ளீர்கள். நீங்கள் அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளைத் தொடுகிறீர்கள். தொடர்ந்து செய்யுங்கள். என் ஆசீர்வாதங்கள் எப்போதும் இருக்கும்” என நித்தி கனகரத்தினம் பூவன் மதீசனுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் நித்தி கனகரத்தினம் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் இந்த பாடலின் போஸ்டர் ஐ பதிவேற்றம் செய்து புதிய பாடகர் ஒருவர் உருவாக்கி விட்டார் எனவும் கூறி இருந்தார்.


இந்த பாடலுக்கான வரிகளை சாந்தகுமார் எழுத, இடையில் வரும் ராப் வரிகளை எழுதி பாடியுள்ளார் ரகு பிரணவன். பாடலை இசையமைத்து பாடியிருக்கிறார் பூவன் மதீசன். ஈழத்தில் இதுவரை காலமும் வராத புதுவித குறியீட்டு உத்தியை காணொளியில் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ராஜ் சிவராஜ். அனைவரையும் கோமாளியாக கவர்ந்த கஜன் தாஸ் என்னும் பல்கலை மாணவனின் அழகிய நடிப்புகளையும் அசைவுகளையும் ஒளித்தொகுப்பின் மூலம் செத்துக்கி உள்ளார் அருண்.
சந்திரமௌலீசன், திலக்சன், உமேஷ், அரவிந்தன் போன்றோரும் தங்களுடைய பங்களிப்புகளை வழங்கி இருந்தனர்.