தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து யாழ். சாவகச்சேரி இந்து கல்லூரி மாணவன் சாதனை

தற்போது வெளியாகியுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவர் தனராஜ் சுந்தர்பவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.


பௌதீக விஞ்ஞானப் பிரிவில் குறித்த மாணவர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தார். பௌதீக விஞ்ஞான பிரிவின் புதிய பாடத்திட்டத்திற்கமைய மாணவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

சரசாலையை பிறப்பிடமாக கொண்ட சுந்தர்பவன் ஒலிம்பியாட் போட்டிகளிலும் சாதனை படைத்து வெளிநாட்டு புலமைப் பரிசில் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.