கொழும்பு வாழ் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

கொழும்பு வாழ் மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்ந்து ஏனைய பயணங்களை முற்றாக தவிர்க்குமாறு கொழும்பு நகர மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.தொழில் நிமித்தம், அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மாத்திரம் வெளியில் செல்லுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு நகர எல்லையில் அதிகமான கோவிட்தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதனால் நகர சபை எல்லையில் உள்ள அனைத்து பூங்காக்களும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கொழும்பு நகரத்தின் வீடுகள், மாடி வீடுகளில் வசிக்கும் மக்கள், முடிந்தளவு இரண்டு வாரங்களுக்கு அருகில் உள்ள வீடுகளுக்கு செல்வதனையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் இரண்டு வாரங்கள் தீர்மானமிக்கதென்பதனால் மக்கள் அவற்றினை தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் அத்தியாவசிய தேவைகளுக்காக வீடுகளிளில் இருந்து வெளியே செல்பவர்கள் முகக் கவசம் அணிந்து இடைவெளிகளை பின்பற்றுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு வாழ் மக்கள் எப்போது அருகில் இருப்பவர்கள் கோவிட் தொற்றாளர்கள் என எண்ணி உரிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பணிக்கு செல்பவர்கள் தங்கள் உணவை அடுத்தவர்களுடன் பகிராமல் தாங்கள் மாத்திரமே உட்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.