இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் 15 பேர் குணமடைவு..!! புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு..!!

இலங்கையில் 15 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 665 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை இலங்கையில் 665 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அவர்களில் 504 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.இதேவேளை, 187 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுவரை 154 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.கொரோனா தொற்றால் இலங்கையில் 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.உலகளாவிய ரீதியில் 3,307,691 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 234,075 பேர் உயிரிழந்துள்ளதுடன் 1,039,182 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.