இலங்கையில் இன்று மட்டும் 13 பேர் கொரோனாவிற்குப் பலி..!! 700 ஐத் தாண்டிய மரணங்கள்!! இன்று மட்டும் 1913 பேருக்கு கோவிட் தொற்று உறுதி..!!

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 13 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 709 ஆக அதிகரித்துள்ளது.திவுலபிட்டியைச் சேர்ந்த 44 அகவைக்கொண்ட பெண், ஜாஎல யைச் சேர்ந்த 70 அகவைக்கொண்ட பெண், மாவில்மடையைச் சேர்ந்த 42 அகவையைக்கொண்ட ஆண், நீர்கொழும்பைச் சேர்ந்த 68 அகவைக்கொண்ட ஆண், 66 வயது மாலாபேயை சேர்ந்த ஆண், மாலபேயைச் சேர்ந்த 82 அகவைக்கொண்ட பெண், பொரல்லையைச் சேர்ந்த 52 அகவைக்கொண்ட ஆண், நுவரெலியாவைச் சேர்ந்த 59 அகவைக்கொண்ட ஆண், மோதறையைச் சேர்ந்த 79 அகவைக்கொண்ட பெண், நிட்டாம்புவைச் சேர்ந்த 68 அகவைக்கொண்ட ஆண், பாணந்துறையைச் சேர்ந்த 69 அகவைக்கொண்ட பெண், புலத்சின்களையைச் சேர்ந்த 77 அகவைக்கொண்ட பெண் மற்றும் கம்பஹாவைச் சேர்ந்த 80 அகவையைக்கொண்ட பெண் ஆகியோரே இவ்வாறு மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,இலங்கையில் இன்று மேலும் 867 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இதற்கமைய இன்றைய தினத்தில் மாத்திரம் 1,913 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கோவிட்கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில், இலங்கையில் இதுவரையில் 113,618 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை கோவிட் தொற்றில் இருந்து 98,209 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.