நாட்டு மக்களுக்கு ஓர் முக்கியமான செய்தி..இன்றிரவு இலங்கையை வந்தடையும் ஸ்புட்னிக் தடுப்பூசிகள்..!!

ரஷ்யாவிலிருந்து 15,000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இன்று இரவு இலங்கையை வந்தடையும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இது இலங்கையால் ரஷ்யாவிடம் கொள்வனவு செய்யப்படுகின்ற மொத்த தடுப்பூசிகளின் முதற்கட்ட எண்ணிக்கையாகும்.மேலும், எதிர்காலத்தில் மேலும் ஒருதொகை தடுப்பூசிகளை ரஷ்யாவிடமிருந்து இலங்கை பெற்றுக் கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.