யாழில் மரத்தில் இருந்து தவறி வீழ்ந்து சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..!

யாழ்ப்பாணத்தில் மரம் ஒன்றில் ஏறிய சிறுவன் அதிலிருந்து தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கல்வியங்காடு, புதிய செம்மணி வீதியில் நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்றது.இச்சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மதுமிதன் (வயது-13) என்ற சிறுவனே உயிரிழந்தார்.சிறுவனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணையை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.