பொருட்கள் கொள்வனவில் தீவிரமாக ஈடுபட்ட கிளிநொச்சி மக்கள்..!

கிளிநொச்சியில் மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் விசேட தொற்று நீக்கல் நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டன.


கிளிநொச்சி, பரந்தன், ஆனையிறவு, அறிவியல்நகர் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகிய பகுதிகளில் குறித்த வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட குறித்த சுத்திகரிப்பு நடவடிக்கை யாழ்ப்பாணத்திலும் இடம்பெற்ற நிலையில், குறித்த விசேட குழுவினர் இன்று கிளிநொச்சியில் இந்நடவடிக்கையில் ஈடுபட்டது. இதேவேளை, இன்று ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருந்த நேரத்தில் மக்கள் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.காலை 6 மணிமுதல் 2 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருந்தது. குறித்த காலப்பகுதியில் மக்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதனர்.கடந்த நாட்களில் காணப்பட்டது போன்று இன்றைய தினம் மக்கள் நெரிசல் காணப்படவில்லை என்பதடன் கிளிநொச்சி சேவைச் சந்தையில் மக்கள் நெரிசல் மிகவும் குறைவாகக் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.