வடக்கில் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் உட்பட 7 பேருக்கு கோவிட் தொற்று உறுதி..!!

யாழ்.மாவட்டத்தில் 3 பேர் உட்பட வடக்கில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த 2 பேருக்கும், யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரில் ஒருவருக்குமாக,
3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அவர்களில் இருவர் பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள்.வவுனியா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.பூவரசம் குளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மல்லாவி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற தலா ஒரு நோயாளிக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.பூநகரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தலில் இருந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பணிப்பாளர் தெரிவித்தார்.