ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பெற்றெடுத்து நலமுடன் வீடு திரும்பிய யாழ்ப்பாணத்து இளம் தாய்.!!

யாழ் போதனா வைத்தியசாலையில் அண்மையில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த தாயார்  வீடு திரும்பினார்.சில வாரங்கள் யாழ் போதனா வைத்தியசாலை மகப்பேற்று விடுதியில் மேலதிக மருத்துவ கண்காணிப்பில் இருந்த பின்னர்,  தாயும் சேய்களும் வீடு திரும்பினர்.இதன்போது வைத்தியர்கள், தாதியர்கள் இணைந்து அவர்களை மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர்.