ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து காரியாலயங்களுக்கும் பூட்டு

தேசிய ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து காரியாலங்களும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைக் காரியாலயம் மற்றும் ஏனைய பிராந்திய காரியாலயங்கள் இவ்வாறு மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.பிரதான காரியாலயமும், பிராந்திய காரியாலயங்களும் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டிருக்கும் என ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கொவிட் நோய்த் தொற்று பரவுகை நிலைமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் மற்றும் அவசர தேவைகளுக்காக தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வோர் 0115226126 மற்றும் 0115226100 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.