தந்தையை விஞ்சிய தனயன்..’மெகா’ லீடிங் எடுக்கும் உதயநிதி..!! ஸ்டாலினே கணிக்காத பாரிய வெற்றி..!!

தந்தை மு.க.ஸ்டாலினை விட, அதிக வாக்குகளை பெற்று, அதிக வாக்கு வித்தியாசமும் பெற்று ஹாஸம் காட்டி வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. இன்று (மே.2) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பான்மை ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.அதேசமயம், 11 அதிமுக அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துள்ளனர். திமுக, அதிமுக தவிர்த்து, மற்ற கட்சிகளில் மக்கள் நீதி மய்யம் மட்டும் ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் அக்கட்சி லீடிங்கில் உள்ளது. பிற்பகல் 2 மணி நிலவரப்படி, மொத்தம் 234 தொகுதிகளுக்கான முன்னணி நிலவரம் வெளியாகியுள்ளது. இதில், 149 தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. 84 தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது. மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளது.இந்த நிலையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், 14 சுற்றின் முடிவில் 48,562 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் கஸ்ஸாலி 14435 வாக்குகள் பெற்று அடுத்த இடத்தில் இருக்கிறார். இருவருக்குமிடையேயான வாக்கு வித்தியாசம் 34,127.
அதேசமயம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எட்டு சுற்றுகளின் முடிவில், தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில், 26, 764 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம் 9489 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெறுகிறார். வாக்கு வித்தியாசம் 17,275.வாக்கு சுற்று எண்ணிக்கையில் வேறுபாடுகள் இருந்தாலும், தந்தை ஸ்டாலினை விட, மிக அதிகமான வாக்குகளை மகன் உதயநிதி பெற்றிருப்பதாகவே பார்க்கப்படுகிறது. அதேபோல், வாக்கு வித்தியாசமும் ஸ்டாலினை விட பாதிக்கு பாதி அதிகமாக உள்ளது.